இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள்!

You are currently viewing இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள்!

நாட்டில் 9 காவல்த்துறை பிரிவுகள் மற்றும் 61 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி பேலியகொட காவல் பிரிவில் நெல்லிகாவத்தை, புரண கொட்டுவத்த மற்றும் கிரிபத்கொட – விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஸ்ரீ ஜயந்த மாவத்த ஆகிய பிரதேசங்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித் தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை ஆகிய காவல் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொம்பனித் தெரு – வேகந்தை கிராம சேவகர் பிரிவு, பொரளை வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, வெல்லம்பிட்டி, லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி, மட்டக்குளி – பர்கசன் வீதியின் தெற்கு பகுதி, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவின் ஹணுப்பிட்டிய கிராம சேவகர் பிரிவு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஹெட்டே வத்த, வெள்ளவத்தை காவல் பிரிவின் மயூர பிளேஸ், நசீர் தோட்டம், மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த ஆகிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

அத்துடன் வத்தளை காவல் பிரிவின் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவே வத்த, பேலியகொட காவல் பிரிவின் பேலியகொடவத்த, மீகவத்த, பட்டிய கிழக்கு, ரோஹன விகாரை மாவத்தை, கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹூணுப்பிட்டிய – வெதிகந்தை ஆகிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு தள்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சீ. வீடமைப்பு தொகுதி, நிட்டம்புவ திஹாரிய கிழக்கு, திஹாரிய வடக்கு, வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி, ஹிர்தா மாவத்தை ஆகிய பகுதிகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வெயாங்கொட – ஹிரிபிட்டிய தெற்கு பகுதியின் நிதாஸ் மாவத்தை, பூகொட குமாரிமுல்ல ஆகிய பிரதேசங்களும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள