இலங்கையில் நாளாந்தம் எட்டு பேர் பலி!

You are currently viewing இலங்கையில் நாளாந்தம் எட்டு பேர் பலி!

வாகன விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறீலங்கா காவற்துறை வாகன தலைமையகத்தின் கல்வி மற்றும் பொதுஜன பாதுகாப்பு சிறீலங்கா காவற்துறை பரிசோதகர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் கடந்த (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிளில் செலுத்துபவர்கள் என்று அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களுக்கான தலை கவசத்தின் தரம் குறித்து சமீபத்தில் வெளியான புதிய வர்த்தமானி அறிவிப்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைவாக எதிர்காலத்தில் தரமான தலைக்கவசம் மாத்திரம் சந்தையில் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

போதை பொருளை பயன்படுத்தி வீதிகளில் வாகனத்தை செலுத்துவோரை அடையாளம் காண்பதற்கு தேவையான உபகரணங்கள் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போதை பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களில் ஏற்படும் மரணம் சுமார் 8 ஆகும். இவர்களின் 4 அல்லது 5 பேர் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்கள் என்றும் சிறீலங்கா காவற்துறை வாகன தலைமையகத்தின் கல்வி மற்றும் பொதுஜன பாதுகாப்பு காவற்துறை பரிசோதகர் சேனக கமகே மேலும் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply