இலங்கையில் நேற்றைய தினம் 2946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

You are currently viewing இலங்கையில் நேற்றைய தினம்  2946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களில் மேலும் 36 பேர் உட்பட 2946 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் (ஜூன்-07) 2946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாடு திருபம்பிய இலங்கையர்கள் 36 பேர் மற்றும் புதுவருடக் கொத்தணியில் 2910 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 207,979 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மேலும் 47 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 176,045 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 30,145 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 47 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply