கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் 1,000 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் புத்தகாயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற வந்த பெண்ணொருவர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், 33 நாளின் பின்னர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
அதனை தொடர்ந்து பெருமளவானவர்கள் அந்தப்பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 107,137, 166ஆம் இலக்க தோட்டங்களிலுள்ள 242 குடும்பங்களை சேர்ந்த 1,020 பேர் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.