இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மே 11க்கு பின்னரும் வேலைக்குச் செல்பவர்களிற்கு அத்தாட்சிப் பத்திரம் தவறினால் அபராதம் !

You are currently viewing இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மே 11க்கு   பின்னரும் வேலைக்குச் செல்பவர்களிற்கு அத்தாட்சிப் பத்திரம்  தவறினால் அபராதம் !

மே11 இற்குப் பின்னர் உள்ளிருப்பிலிருந்து வெளியேறினால்,  இல்-து-பிரான்சின் பொதுப்போக்குவரத்துக்கள் பெரும் சிக்கலிற்கு உள்ளாகும் நிலையில உள்ளதாக இல்-து-பிரான்சின் முதல்வரும், இல்-து-பிரான்சின் போக்குவரத்தான ile de france mobilité இன் தலைவியுமான வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார்.

பெருமளவானவர்கள் ஒரே நேரத்தில் பொதுப் போக்குவரத்துக்களை உபயோகிக்கத் தொடங்கினால், கொரோனாத் தொற்றுத் தடைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையோ, சமூக இடைவெளியையோ கடைப்பிடிக்க முடியாது என்றும், இது பெரும் ஆபத்தை உருவாக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வீட்டிலிருந்தபடி வேலை செய்பவர்கள் (télétravail) 100% தொடர்ந்தும் மே 11 இலிருந்தும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படியும், இரண்டாவது வாரத்தில் இதை  90% ஆகக் குறைப்பதாகவும், மூன்றாவது வாரம் 80% ஆகக் குறைப்பதாகவும், மிகுதிப் பேர் கோடைகாலம் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரியமாறும், அதற்கான கட்டளையை நிறுவனங்களிற்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மே11 இற்குப் பின்னர், குறிப்பிட்ட சன நெருக்கமான நேரங்களை, பேருந்து, RER, Tram, மற்றும் métro போன்ற பொதுப் போக்குவரத்துக்களை வேலைக்குச் செல்பவர்களுக்காக மட்டுமே ஒதுக்க வேண்டும். இதற்காக வேலைக்குச் செல்பவர்களுக்கு, வேலைத்தளத்தின் அத்தாட்சிப் பத்திரம் (attestation employeur) கட்டாயம் அவசியம். வேலையாட்களுக்காக ஒதுக்கப்பட்ட, குறிப்பிட்ட நேரத்தில், பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்தும் போது, காவல்துறையினரோ, தொடருந்து பாதுகாப்புப் படையினரோ, சோதனை செய்யும்போது, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் இல்லாவிட்டால்,  135€ அபராதம் விதிக்கப்படும்” எனவும் வலெரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள