முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படை வாகனம் மோதியதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையில், 11.01 இன்றையதினம் காலையில், சிறிலங்கா கடற்படையின் வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பத்தை மோதித்தள்ளியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த, 32வயதான கே.ஜீவன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், அவரின் மனைவியான ஜீ.வினுஜா படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் முல்லைத்தீவு காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.