இஸ்ரேலுக்கு தண்டனை உறுதி என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை!

You are currently viewing இஸ்ரேலுக்கு தண்டனை உறுதி என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு தண்டனை உறுதி என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க உளவுத்துறை தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் ஈரானின் துணைத் தூதரகம் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது. தொடர்புடைய தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட 7 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஈரானின் பதிலடி தாக்குத தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் கூட்டாளிகளாக கருதப்படும் ஹிஸ்புல்லா அல்லது ஹவுதிகள் இந்த தாக்குதலை முன்னெடுக்கலாம் என்றே அமெரிக்கா கணித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவது உறுதி என்றே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக வெடிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

அதுவே உலகப் போருக்கு இட்டச்செல்லவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும், ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாடு நேச நாடுகளான ரஷ்யா, சீனா மற்றும் வடகொரியாவின் ஆதரவு கோரலாம்.

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால், மேற்கத்திய நாடுகளும் களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 1-ம் திகதி டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவும் மிகுந்த எச்சரிக்கை நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments