ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை ஈரான் முன்னெடுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 50 ட்ரோன்களை,200 மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வான்வெளியில் பல மணி நேரத்திற்கு பின்னர் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈராக் வான் வெளியில், ட்ரோன்களின் செயற்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஜோர்தான், ஈரான் மற்றும் இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டு, விமான சேவைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவமும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தொடுக்கும் நேரடி தாக்குதல் இதுவென்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான ராக்கெட் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஈரானில் உள்ள தூதரகம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில், 13 முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். இதனை அடுத்து ஈரான் இந்த குரூஸ் மிசைல் என்று அழைக்கப்படும் குறும்தூர ஏவுகணைகளையும், தற்கொலை ஆளில்லா விமானங்களையும் அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதேவேளை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஆயுதப் படைகள் ஹோர்முஸ் கடற்பரப்பில் இஸ்ரேலுடன் தொடர்புடையதாக கருதப்படும் கொள்கலன் கப்பலைக் கைப்பற்றியுள்ளன. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) கப்பலை கைப்பற்றியதாக ஈரானிய அரசு ஊடகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.