இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிரான்ஸ்! அறிவித்தார், பிரான்ஸ் அதிபர்!!

You are currently viewing இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் பிரான்ஸ்! அறிவித்தார், பிரான்ஸ் அதிபர்!!

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரான்ஸ் உள்ளாகியுள்ளதாக, பிரான்சின் அதிபர் “Emmanuel Macron” அறிவித்துள்ளார்.

பிரான்சின் “Nice” பகுதியில் தேவாலயப்பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த மூவரும் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூவரில், குறித்த தேவாலயத்தின் பணியாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி படுகொலைத்தாக்குதல்களை கண்டித்துள்ள பிரான்ஸ் அதிபர், தனது தனித்துவ தன்மைகளை பிரான்ஸ் எப்போதும் விட்டுக்கொடுக்காதென உறுதியாக தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற படுகொலைகளையடுத்து, பிரான்ஸ் எங்கும் இராணுவக்கவல்களை இரட்டிப்பாக்கியுள்ளதாகவும் பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய படுகொலைத்தாக்குதல்களை நடத்தியதாக கருதப்படும் இளைஞரை பிரான்ஸ் இராணுவம் கைது செய்துள்ளதாகவும், குறித்த 21 வயதுடைய இளைஞர் துனீசியாவை சேர்ந்தவர் என்றும், கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்திலேயே பிரான்சுக்குள் உள்நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக மேலும் அறிய முடிகிறது.

சில வாரங்களுக்கு முன்னதாக, பிரான்ஸ் பாடசாலையொன்றில், சர்ச்சைக்குரிய “முஹம்மது நபிகள்” என்று கூறப்படும் வரைபடத்தை மாணவர்கள் மத்தியில் காண்பித்ததாக கூறப்பட்ட பிரெஞ்சு ஆசிரியரொருவர், பகிரங்கமாக கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு, “முஹம்மது நபிகள்” அவரால் இகழப்பட்டதால் அவரை இஸ்லாமிய “ஷரியா” கொன்றதாக கொலையாளி தெரிவித்ததாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டமை நினைவிருக்கலாம்.

பகிர்ந்துகொள்ள