ஈராக்கில் மீண்டும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு!

  • Post author:
You are currently viewing ஈராக்கில் மீண்டும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு!

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், அமெரிக் காவை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் நடத்தியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா நடத்திய வான்தாக்குலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.இதனை கண்டித்து, தலை நகர் பாக்தாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர்.

இந்த சம்பவத்துக்கு ஈரானே பொறுப்பு என்று கூறி அமெரிக்க ஜானதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.இந்த நிலையில் நேற்று காலை ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி சிரியாவில் இருந்து விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் வந்தார். அவரை ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சி படையின் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ் வரவேற்று காரில் அழைத்து சென்றார். இதனை அறிந்து கொண்ட அமெரிக்க ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தது.
அதன்படி அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் அங்கு விரைந்து காசிம் சுலைமானி உள்ளிட்டோர் சென்ற 2 கார்களின் மீது குண்டுகளை வீசின. இதில் காசிம் சுலைமானி மற்றும் அபு மஹதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் அபு மஹதியின் ஆதரவாளர் கள் 8 பேரும் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.   இந்த தாக்குதல் குறித்து, இந்திய, சீன, ரஷ்ய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  
ஈரான் ஆதரவாளர்கள்  சென்ற  அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதி சுலைமானிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக ஈராக் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில், உயிரிழப்புகள் இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள