திங்கள்கிழமை இரவு ஈராக் தலைநகர் பக்த்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக சர்வதேச உடகவியாளர்கள் தெரிவித்துள்ளார்,
மூன்றாவது ஏவுகணை பசுமை மண்டல வளாகத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாக்தாத்தின் புறநகரில் உள்ள ஒரு மாவட்டத்திலிருந்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது , ஏவுகணை வீழ்ந்து வெடித்ததும் அங்கு அவசர சமிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் ஊடகவியாளர்கள் கூறுகின்றனர்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முறுகல் நிலை தொடரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது ஈரான் மீதே சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக ஆரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சேதங்கள் தொடர்பிலும் , தாக்குதல் தொடர்பிலும் தூதர கம் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை