ஈரானில் சொந்த தாயின் மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்!

You are currently viewing ஈரானில் சொந்த தாயின் மரண தண்டனையை நிறைவேற்றிய மகள்!

ஈரானில் சொந்த தாயின் மீதான காட்டுமிராண்டித்தனமான தூக்கு தண்டனையில் நாற்காலியை எட்டி உதைத்து தண்டனையை நிறைவேற்றுமாறு மகள் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டார். ஈரானில் பல ஆண்டுகளாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், விவாகரத்து வழங்க மறுத்ததாகவும் தெரிவித்து மரியம் கரிமி என்ற பெண் தனது கணவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த கொலையில் மரியம் கரிமிக்கு உதவியதாக தெரிவித்து, அவரது தந்தை இப்ராஹிமும் கைது செய்யப்பட்டார்.

மரியம் மற்றும் இப்ராஹிம் கைது செய்யப்படுவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் இறந்து விட்டதாக தெரிவித்து அவரது ஆறு வயது சிறுமி தனது அப்பாவின் தாத்தா மற்றும் பாட்டியுடன் அழைத்து செல்லப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு 19 வயதான மரியம் மகளுக்கு தனது தந்தை கொல்லப்பட்டது போன்ற விவரங்கள் சொல்லப்பட்டது.

ஈரானின் இஸ்லாமிய சட்டத்தின் கீழ், கொலையாளியின் தண்டனையை அரசு தீர்மானிப்பதை விட கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள்தான் தீர்மானிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி, மரியம் மற்றும் இப்ராஹிமின் சிறைத் தண்டனை மரண தண்டனைக்கு மாற்றப்பட்டது, ஆனால் தெரியாத காரணங்களுக்காக தூக்கிலிடப்படுவது தாமதமானது.

இந்தநிலையில் மரியத்தின் மகள் ராஷ்ட் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு தூக்கு மேடையில் நின்ற சொந்த அம்மாவின் காலடியில் இருந்த நாற்காலியை உதைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு செய்துள்ளனர்.

இதன்மூலம் மரியம் ராஃப்டரில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். மரியத்தின் தந்தை இப்ராஹிமுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டது, ஆனால் அவரது மகளின் உடல் தூக்கு மேடையில் இருந்து ஊசலாடிக் கொண்டிருந்த மேடைக்கு முன்னால் காவலர்கள் அவரை அழைத்துச் செல்வதை உறுதி செய்தனர்.

அத்துடன் இந்த ஆண்டு ஜூன் மாதம், இப்ராகிமும் தனது மகள் இருந்த அதே சிறையில் கொல்லப்பட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply