நரி வலையில் சிக்கிய முதுகு முறிந்த தமிழர்!

You are currently viewing நரி வலையில் சிக்கிய முதுகு முறிந்த தமிழர்!

புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

முதன்முறையாக இணையவழியூடாக புலம்பெயர் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நான்கு நாடுகளின் பிரதிநிகளைக் கொண்ட கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர் அமைப்பின் உறுப்பினர்களுடன் கடந்த வாரம் அரசாங்கம் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது. இக்கலந்துரையாடலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு முதலில் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்ய வேண்டும்.

வடக்குக், கிழக்கில் உள்ள சிவில் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை நிறுத்த வேண்டும் என புலம்பெயர் சமூகம் இரு நிபந்தனைகளையும் விடுத்துள்ளது.

இதேவேளை இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கைகள் தொடர்பில் கவனமாக அவதானிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த தலைமைமுறையினருக்கு இப்பிரச்சினையை எடுத்துச் செல்லாது, இவற்றைத் தீர்த்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வடக்குக் கிழக்கில் படையினரால் மேற்கொள்ளப்படும் பலவந்தமான காணி அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேசத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு ரணிலின் மாய வலையில் முதுகு முறிந்த அமைப்புகளும் தமிழர்களும் சிக்கியுள்ளார்கள் வெற்று வாக்குகளை நம்பி நடுத்தெருவில் நின்றும் தொடர்ந்தும் சிறீலங்காவின் துருப்பு சீட்டுக்களாக இந்த தமிழர்கள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments