ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு எதிரான நச்சுத் தாக்குதல்!

You are currently viewing ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு எதிரான நச்சுத் தாக்குதல்!

ஈரான், ஹஃப்டகல் (Haftkel) என்ற பிதேசத்திலுள்ள மகளிர் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக நேற்று  நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான IRIB என்ற ஊடகத்தை சுட்டிக்காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த சுமார் 60 மாணவிகள் பதற்றம், மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர் என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து நடத்தப்படும் நச்சுத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

கடந்த மாதம் மார்ச் 7ஆம் திகதி அறிக்கையிடப்பட்ட தகவல்படி, சுமார் 230 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 5,000க்கும் அதிகமான மாணவிகள் நச்சுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அது தொடர்பான இறுதி அறிக்கை, எதிர்வரும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று குறித்த சம்பவங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஹமிட்ரேஸா காஸிமி (Hamidreza Kazemi) தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments