ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

You are currently viewing ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் ஈரான், உலகநாடுகளை அச்சுறுத்தும் விதமாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் ஈரானுக்கு எதிராக அணு ஆயுத உற்பத்தி, மனித உரிமைகள் மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொருளாதார தடை விதிக்க கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் நாடாளுமன்ற சபை கூட்டப்பட்டு 403 எம்.பிக்கள் ஆதரவுடன் ஈரான் மீது தடை விதிக்க 2 மசோதாக்கள் வரையறுக்கபட்டன. செனட் சபை ஒப்புதலுக்கு பின் அவை நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. அதன்படி ஈரானின் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு தடை, ஈரான் அதிபர் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுக்கு தடை விதிக்க ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments