தமிழர்கள் வரலாற்றில் பதியபட்டஇ ஒருவராலும் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியாத வீழ்ச்சி அல்லது மௌனிக்கப்பட்ட விடுதலை போராட்டம் சர்வதேசத்தை உலுக்கிய ஒரு இனப்படுகொலையில் நிறைவு பெற்றாலும் இன்னமும் தமிழர் வரலாறுகளை அல்லது அடையாளங்களை அழித்தொழிக்கும் கட்டமைப்புசார் இனப்படுகொலை அரங்கேறிவருவதை மறுதலிக்க முடியாது. அப்பாவிப் பொதுமக்களை திட்டமிட்டு கொன்றொழித்த கயவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ( ஐஊஊ) தண்டிக்க வேண்டும் என ஒரு சாராரும்இ இல்லை இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் ( ஐஊது) தான் நிறுத்த வேண்டும் என இன்னொரு பகுதியினரும் வாதிடுவது பதினோரு வருடங்கள் கடந்த நிலையிலும் நாம் கண்கூடாக காணகூடியவாறு இருக்கிறது உண்மையில் வேதனையளிக்கும் விடயமாகும். நாம் எப்படி நீதி நோக்கிய பயணத்தில் பயணிக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்தி நிற்கிறது என்பது மிகவும் துரதிஸ்டவசமானது.
எமது இலக்கு என்ன என்பதை சரிவர புரிந்து கொண்டு எந்தெந்த வழிகளில் அதை அடைய முடியும் என திட்டமிட்டு நகரும் பட்சத்தில் தான் எமது முன்னேற்றத்தை அளவிட முடியும். ஒரு தசாப்தம் தாண்டிய பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் தம்மை தமிழரின் ஏக பிரதிநிதிகளாக காட்டி கொண்டு தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று மார்தட்டி கொண்டு திரிகிறவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி தாங்கள் எடுக்கின்ற முயற்சிகள் ஒரு குறிப்பிட்ட மீடியா சர்வதேச நீதிமன்றம் நோக்கி நகர்வுகளை மேற்கொள்வதால் பின்னடைவை சந்திக்கின்றன எனக் கூறியதாக தகவல் கசிந்தது நகைப்பை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு மீடியாவால் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியுமானால் அதை நிச்சயம் பாராட்டி அல்லவா தீர வேண்டும்.
அது அப்படியிருக்க இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியுமா என கேள்வி தமிழரை வாட்டி வதைக்கிறது. அந்த பொன்னாளை எதிர்பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இதயங்களும் ஏங்கி கொண்டு இருப்பதை உணர்வுள்ள யாராலும் மறுக்க முடியாது.
சரி இப்போது கேள்விக்கு வருவோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் என ஏன் இரண்டு நீதிமன்றுகள் உள்ளன? தமிழர்கள் இந்த இரண்டு நீதிமன்றங்களையும் நோக்கி வேலை செய்ய வேண்டுமா என்ற வினாக்களுக்கு விடை என்ன?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 1998-ல் ரோம் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது ரோம் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட சர்வதேச சட்டமீறல்கள் குறித்து தனி நபர்கள் மீது இனப்படுகொலை உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தண்டனை வழங்க முடியும். ஆனால் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்டுஇ உறுதிப்படுத்தபட்ட நாடுகள் மீது மாத்திரமே அதற்கு அதிகாரம் உண்டு. இலங்கை இந்த ரோம் சாசனத்தில் கையொப்பமிடாத ஒரு நாடு என்ற காரணத்தாலேயே தமிழர்களால் இன்று வரை எதுவும் செய்ய முடியவில்லை என்பதே ஒரு கசப்பான உண்மையாகும் . வேறு வழிகள் இல்லையா என பரிதவிக்கும் எம் உள்ளங்களுக்கு கடினமான மாற்று வழிகள் உள்ளன என்பது ஆறுதலை தந்தாலும்இ அந்த வழிகளில் எமது முன்னேற்றம் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை பார்க்கும்போது சோர்வு ஏற்படத்தான் செய்கிறது. பாதுகாப்பு சபை தமிழர்கள் பிரச்சனையை பரிந்துரை செய்யும் பட்சத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எமக்கான நீதியைப் பெற்றுத்தர முடியும். அதை விட சரத்து 15- டிளை ( யுசவiஉடந 15 டிளை) பிரகாரம் ரோம் சாசனத்தில் கையொப்பமிட்ட அரசுகளின் பரிந்துரை அடிப்படையிலும் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையின் போர் குற்றவாளிகள் மீது விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை கொடுக்க முடியும். இந்த வழிகளில் எவ்வளவு தூரம் முன்னேற்றம் இருக்கிறது என்பதை மனச்சாட்சி உள்ளவர்கள் தட்டி பார்த்து கொள்ளுஙகள்.
சரி சர்வதேச நீதிமன்றம் என்ன செய்கிறது என்று ஆராயும் பட்சத்தில் இந்த நீதிமன்றமானது ஐக்கிய நாடுகளின் உயரிய முதன்மை நீதிமன்றமாகும். இது அரசுகளுக்கு இடையிலான பிணக்குகளை தீர்ப்பதோடுஇ ஐ. நா. ஒப்பந்தங்கள் மற்றும் சட்டம் சார்ந்த பிணைப்புகளை ஏற்படுத்துகிறது. எப்படி மியன்மார் அரசை தி காம்பியா ( வுhந புயஅடியை )என்கிற அரசு இதர 58- அரசுகளுடன் இணைந்து சட்டத்தின் முன் நிறுத்தியதோ அது போல இலங்கை அரசையும் வேறு அரசுகள் தமிழருக்கு உதவ முன்வரும் பட்சத்தில் நிறுத்த முடியும். கட்டமைப்புசார் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதுஇ அதைச் செய்தவர்களைத் தண்டித்தல் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களை பாதுகாத்தல் என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் ஒரு அரசு இலங்கை மீது வழக்கு பதிவு செய்ய முடியும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தனி நபர்களை மாத்திரமே நிறுத்த முடிகின்ற அதே வேளைஇ ஐ. நா.வின் சர்வதேச நீதிமன்றில் இலங்கை அரசை நிறுத்த முடியும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட நாம்இ தமிழர்கள் வாழ்கிற ஒவ்வொரு நாட்டிலும் இந்த விடயம் தொடர்பாக அந்தந்த அரசுகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். ஒரு அமைப்பினரோ அல்லது ஒரு சிறு குழுவோ இந்த விடயத்தை வெற்றிகரமாக செய்ய முடியாது.
தியாக தீபம் தீலிபன் அவர்கள் கூறியது போல மக்கள் திரண்டு எழும் பட்சத்தில் தான் தமிழர்கள் தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும். மாவீரர்களை நினைவு கூறும் இம்மாதத்தில் அந்த மறவர்களை ஒரு கணம் மனதில் நிறுத்தி அந்த தியாகத்தை சிந்திப்போமானால்இ நிச்சயம் எமது மனச்சாட்சி உறுத்தும். எம்மினத்தின் விடுதலைப் போரில் ஆகுதி ஆகிய அந்த தியாகங்கள் வீணாகி போய் விட அனுமதிக்கலாமா? மானமுள்ள தமிழினமே முயன்றால் முடியாத காரியம் என்று ஒன்றுண்டோ? இனியாவது எழுந்து புறப்படுங்கள். வெற்றி நிச்சயம். நாளை நமதே!!
ராஜி பாற்றர்சன்
2020.11.07