தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

You are currently viewing தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

இந்திய இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலு்ம், பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்திலும், சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர்த் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன், திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


08.11.1987 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை 3ம் கட்டை பகுதியில் இந்தியப் இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய வன்னி மாவட்ட படைத்தளபதி மேஜர் பசீலன், 2ம் லெப்டினன்ட் கிரிசாந்தன் ஆகிய மாவீரர்களின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!! 1

​08.11.1995 அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் வினோதினி ஆகிய மாவீரரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!! 2

08.11.1999 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன் ஆகிய மாவீரரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!! 3

08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள