ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் ஜெயராமன் மறைவு!

You are currently viewing ஈழத்தின் பிரபல வயலின் வித்துவான் ஜெயராமன் மறைவு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் நேற்று அதிகாலை காலமானார்.

யாழ்ப்பாணம் – நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று அதிகாலை அவர் காலமானார்.

நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments