ஈழத்து பண்டிதர், பாடலாசிரியர் , தமிழ் மொழியின் அறிஞர் வீ.பரந்தாமன் அவர்கள் இன்று காலமானார்.
‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர்.
விடுதலைபோரட்டத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பற்றும் கொண்ட பண்டிதர் பரந்தாமன் கெரில்லா போர் விரகுகள் எனும் போர் தந்திரோபாய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவர் இன்று பருத்தித்துறை புலோலியில் இயற்கை எய்தியுள்ளார்.
இவரது மகன் இளம்பரிதி மாவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது









