முதல் பெண் மாவீரர் 2-ம் லெப்.மாலதியின் 36-ஆண்டு நினைவு நாளும் ஈழத் தமிழ்ப் பெண்கள்
எழுச்சி நாளுமான இன்று – இந் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் எழிச்சி பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அணியின் உதவிச் செயலாளர் திருமதி வாசுதேவன்-சிவனேஸ்வரி தலைமையில் இன்று – (10.10.2023) செவ்வாய்க்கிழமை
பிற்பகல்- 03, மணிக்கு இந் நிகழ்வுகள் எழிச்சி பூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.
நிகழ்வில் பொதுச் சுடரினை மருத்துவப் பிரிவு மாவீரர் மேஜர் அஜந்தனின் தாயார் திருமதி பவளரத்தினம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.
எழிச்சி உரைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா-கிரிதரன், மகளிர் அணித் தலைவி திருமதி வாசுகி-சுதாகர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்-சுகாஸ், கட்சியின் உறுப்பினர் மு.ஈழத்தமிழ்மணி ஆகியோர் நிகழ்த்தினர்.
இதில் கட்சியின் மகளிர் அணியின் உறுப்பினர்கள், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.