உக்கிரேனில் 3 பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினர் பலி!

You are currently viewing உக்கிரேனில் 3 பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினர் பலி!

போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் 3 பிரித்தானிய முன்னாள் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் cruise ஏவுகணை தாக்குதலில், சம்பவயிடத்திலேயே மூவரும் உடல் சிதறி பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும், குறித்த தாக்குதலில் பிரித்தானியர்கள் உட்பட மொத்தம் நூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட மூன்று பிரித்தானிய சிறப்பு வீரர்களும், உக்ரைன் போரில் பங்கேற்கவில்லை எனவும், ஆனால் பயிற்சி அளித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து எல்லையில் இருந்து சுமார் 6 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான Yavoriv தளம். சம்பவத்தன்று சுமார் 30 cruise ஏவுகணைகளை ரஷ்யா ஏவியுள்ளது.

மொத்தம் 6 போர் விமானங்களில் இருந்து, அதுவும் ரஷ்ய எல்லையில் இருந்தே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பிரித்தானிய முன்னாள் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகாரத்துறைக்கு தகவல் தெரியவில்லை என கூறப்படுகிறது.

மேலும், கூறப்பட்டதை விட அதிகமானோர் அந்த இடத்தில் கொல்லப்பட்டனர் எனவும் உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலை, உள்ளூர் நேரப்படி சுமார் 5.45 மணியளவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது. வானம் திடீரென்று சிவப்பாக மாறியதாகவும், தாக்குதல் நடந்து பல மணி நேரத்திற்கு பிறகும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்தவண்ணம் இருந்தது என சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments