உக்ரைனின் நடவடிக்கையால் ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்!

You are currently viewing உக்ரைனின் நடவடிக்கையால் ரஷ்யாவில் அவசரகால நிலை பிரகடனம்!

உக்ரைனின் ஷெல் தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய கிராமத்தில் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 14 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலின் போது இரு நாட்டு ராணுவங்களும் பொதுமக்களை குறிவைப்பது இல்லை என்று அறிவித்து வந்தாலும், பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.

அந்த வகையில் நேற்று இரவு உக்ரைனிய ராணுவம் ரஷ்யாவின் பிரையன்ஸ்க்(Bryansk) பிராந்தியத்தின் எல்லைக்கு அப்பால் உள்ள கிராமத்தில் ஷெல் தாக்குதல் நடத்தியது, இதில் 4 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவும், 2 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் குடியிருப்பு கட்டிட பகுதி ஒன்று முழுமையாகவும், இரண்டு வீடுகள் பகுதியளவும் அழிக்கப்பட்டு இருப்பதாக போகோமாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஷ்ய கிராமத்தில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலுக்கு உக்ரைனிய தலைவர்களை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட கிராமத்தில் ரஷ்யா அவசர கால நிலையை அமுல்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணி அப்பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments