உக்ரைனின் மற்றொரு நகரை கைப்பற்றியது ரஷிய ராணுவம்!

You are currently viewing உக்ரைனின் மற்றொரு நகரை கைப்பற்றியது ரஷிய ராணுவம்!

தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் பிடித்தது. இதனை அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி குறிப்பாக தலைநகர் கீவ், 2-வது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.

அந்த நகரங்களில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. சமீபத்தில் கெர்சான் நகரை ரஷிய படை முழுமையாக கைப்பற்றியது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகராக மரியுபோல் உள்ளது. தெற்கில் உள்ள இந்த நகரை கைப்பற்ற ரஷியா ராணுவம் சில நாட்களுக்கு தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.

கடல் வழியாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வந்தனர். மேலும் தரைப் படையும் அந்நகருக்குள் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் பிடித்தது. இதனை அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments