கிழக்கு ஆக்கிரமிப்பு நகரமான Lysychansk-யில் உக்ரைன் நடத்திய ஷெல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. Luhansk பிராந்தியத்தில் அமைந்துள்ள நகரம் Lysychansk. சுமார் 1,10,000 மக்கள்தொகை கொண்ட இந்நகரம் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்தது. மேலும், உக்ரைனின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் Lysychansk அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்நகரின் மீது உக்ரைன் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் கூறுகையில், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் ஊழியர்கள் Lysychansk – யில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து 20 பேரின் உடல்களை மீட்டனர் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் மேற்கத்திய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து விரைவான மற்றும் நிபந்தனையற்ற கண்டனத்தை எதிர்பார்ப்பதாகவும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.