நமீபியா நாட்டின் ஜனாதிபதி புற்றுநோயால் மரணம்!

You are currently viewing நமீபியா நாட்டின் ஜனாதிபதி புற்றுநோயால் மரணம்!

2014ஆம் ஆண்டில் நமீபியா நாட்டின் ஜனாதிபதியான Hage Geingob புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விண்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் Hage Geingob-யின் உயிர் பிரிந்தது.

அவருக்கு வயது 82. Hage Geingob மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘ஜனாதிபதி Geingob பல தசாப்தங்களாக தனது நாட்டிற்கு தன்னலமின்றி, அயராது சேவை செய்தார். மேலும் கனடாவிற்கும், நமீபியாவிற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த உதவினார்.

அவரும் நானும் பகிர்ந்து கொண்ட நேரத்தை நான் எப்போதும் பாராட்டினேன். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நமீபிய மக்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments