உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

You are currently viewing உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

ரஷ்ய நிலப்பரப்பு மீது தாக்குதல் தொடர்ந்தால் உக்ரைனின் அதிகார மையத்தை ரஷ்ய ஆயுதப்படையினர் தாக்குவார்கள் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர்த்தாக்குதலை ஒன்றரை மாதங்களாக மேற்கொண்டுவரும் நிலையில், உக்ரைனின் பெரும் பகுதிகளை ரஷ்ய ராணுவத்தினர் உருத்தெரியாமல் அழித்துள்ளனர்.

போரின் முதல் பகுதியில் வேகமாக முன்னேறிய ரஷ்ய படையினர், பின்னர் உக்ரைன் ராணுவத்தின் தடுப்பு தாக்குதலை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான பகுதிகளில் கிழக்கு நோக்கி மீண்டும் பின்னகர தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து, ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு போர் ஹெலிகாப்டர்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் 2 நபர்கள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய நிலப்பரப்பிற்குள் நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் உலகநாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத்தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவிடம் கேள்வி எழுப்பட்ட போது, அதற்கு மறுப்பும் தெரிவிக்காமலும், பொறுப்பேற்றுக் கொள்ளாமலும் ராணுவ விவகாரங்களை வெளியே தெரிவிக்க முடியாது என குழப்பமான பதிலை தெரிவித்தார்.

இந்தநிலையில், ரஷ்ய நிலப்பரப்பு மீது தாக்குதல் மீண்டும் நடைபெற்றால், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட அனைத்து அதிகார மையத்தையும் ரஷ்ய ஆயுதப்படையினர் தாக்கி அழிப்பார்கள் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments