கீவ் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மீது வியாழன் அன்று ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது. கீவ் மட்டுமன்றி பிற நகரங்கள் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்தததாகவும், தாக்குதல்களினால் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் Ihor Klymenkok இதுகுறித்து கூறும்போது, இது ஒரு அமைதியற்ற காலை. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் வெடிப்புகள் கேட்டன என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கீவ் மற்றும் Cherkasy பகுதிகளிலும், கிழக்கில் உள்ள Karkiv நகரிலும் மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தலைநகரின் பல இடங்களுக்கு மீட்புக் குழுக்களை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.