மருதனார்மடம் கொத்தணியில் உடுவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணுக்கு சற்று முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் 240 பேரின் பரிசோதனை முடிவுகளில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்ட உடுவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.