கல்முனையில் தொற்றாளர் தொகை 773ஆக அதிகரிப்பு!

You are currently viewing கல்முனையில் தொற்றாளர் தொகை 773ஆக அதிகரிப்பு!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் நேற்று புதன்கிழமை (30) கொரோனா தொற்று 773ஆக அதிகரித்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தி கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 306 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 70 பேரும், பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 65 பேரும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 பேரும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 31 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 13 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 170 பேரும், கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 பேரும், சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 15 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 36 பேரும், நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 06 பேருமாக மொத்தம் 773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது வரையில் அக்கரைப்பற்று சந்தை உப கொத்தணியில் 735 பேரும் ஏனைய பிரதேசங்களிலிருந்து 38 பேருமாக மொத்தம் 773 பேர் கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

பகிர்ந்துகொள்ள