போலந்து நாட்டின் டுரன்(Torun) நகரில் ஆர்லென் கோப்பர்நிகெஸ் கோப்பைக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இதில் சுவீடன் நாட்டை சேர்ந்த ஆர்மண்ட் டியூபிளாண்டிஸ் – Armand Duplantis (20) என்ற வீரர் கலந்து கொண்டார்.
அவர் 6.17 மீட்டர் வரை உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்து உள்ளார். இதனை உலக தடகள அமைப்பு தெரிவித்து உள்ளது. டியூபிளாண்டிஸ் தனது 2வது முயற்சியில் இந்த உயரத்திற்கு சென்று சாதனை செய்துள்ளார்.
![உயரம் தாண்டுதலில் சுவீடன் நாட்டு வீரர் புதிய உலக சாதனை! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/02/Swedens-Armand-Duplantis.jpg)
கடந்த 2014ம் ஆண்டில் பிரான்சு நாட்டை சேர்ந்த ரெனாட் லாவில்லேனி என்பவர், டியூபிளாண்டிஸ் செய்த சாதனையை விட ஒரு சென்டி மீட்டர் குறைவாக தாண்டி இருந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.