உறவுச்சோலை மறுவாழ்வுக்கழகம் எனும் எமது தொண்டு நிறுவனம், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என இலங்கையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம் இந்த நான்கு வருடத்தில் திருமணம், வாழ்வாதாரம் , சுயதொழில், வாய்ப்பு, கல்வி , மருத்துவம் என பல உதவித்திட்டங்களை செய்து முடித்திருக்கின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் எமது கழகம் 70 இலசட்சம் ரூபா (7 million) பெறுமதியில் உதவித்திட்டங்களை செய்து பலரின் வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றது.
30 வருட கடும் யுத்த காலத்தில் பல பிள்ளைகள் பெற்றோரை இழந்த நிலையில் அவர்களுக்கு என இல்லங்கள் அமைக்கப்பட்டு அதில் வாழ்ந்து வந்தார்கள் பின் 2009 இற்க்குப்பின் அந்த இல்லங்களில் இருந்த பிள்ளைகள் மீண்டும் ஆதரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களின் பெற்றோரை இழந்து, அவர்களும் பாதிக்கப்பட்டு தற்போது அவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். மூன்றாம் தலைமுறையும் பாதிக்கப்படக்கூடாது என எமது அமைப்பு பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.
எமது இந்த புனிதப் பணியை சிறப்பாக செய்ய பலரின் வியர்வைத் துளிகள் சிந்தப்பட்டு வருகின்றன.எமக்கு உதவிகள் செய்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
எமக்காக இரத்தம் சிந்திய உறவுகளின் பிள்ளைகளுக்காக உங்கள் வியர்வைத் துளியை சிந்தி எமக்கான உதவிக்கரங்களை நீட்டுமாறு பணிவாக வேண்டிக் கொள்கின்றோம். எமது தெய்வத்தின் குழந்தைகளுக்கு உலகத் தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி அவர்களையும் உங்கள் குழந்தைகளைப்போல் வாழவையுங்கள். நிச்சியமாக அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
“தொடர்வோம் எங்கள் புனிதப் பணியை உறவுகளற்ற பிள்ளைகளுக்காக”
நன்றி
உறவுச்சோலை மறுவாழ்வுக் கழகம்









