உறைந்த ஏரியில் விழுந்த மூன்று சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 10 வயது சிறுவன்!

You are currently viewing உறைந்த ஏரியில் விழுந்த மூன்று சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 10 வயது சிறுவன்!

பிரித்தானியாவின் சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்த ஏரியில் விழுந்த மூன்று சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 10 வயது சிறுவன் ஜாக் ஜான்சனை அவரது உறவினர்கள் ஹீரோ என புகழ்ந்துள்ளனர். பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு-க்கு மத்தியில், சோலிஹல் பகுதியில் உள்ள உறைந்து போன Babbs Mill ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென உறைந்து இருந்த ஏரிக்குள் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நான்கு சிறுவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலும், பேர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களில் 8, 10 மற்றும் 11 வயதுடைய மூன்று சிறுவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் 6 வயதுடைய நான்காவது சிறுவன் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் உறைந்த ஏரிக்கு தவறி விழுந்த மூன்று சிறுவர்களின் கூக்குரல் கேட்டு, அவர்களை காப்பாற்ற தைரியமாக முயற்சித்து 10 வயது சிறுவன் ஜாக் ஜான்சன் ஹீரோவாக உயிரிழந்த இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜாக்-கின் அத்தை சார்லோட் மெக்ல்முர்ரே, ஜாக் ஜான்சன் தனது சொந்த பாதுகாப்பை புறக்கணித்து, மற்ற குழந்தைகளை காப்பாற்ற தைரியமாக முயற்சி செய்தார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் சார்லோட் மெக்ல்முர்ரே பேஸ்புக்-கில், “உயிரிழந்த 10 வயது சிறுவன் என்னுடைய மருமகன். ஒருவர் பனிக்கட்டி வழியாக செல்வதைக் கண்ட அவன், ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றார்”. என பதிவிட்டுள்ளார்.

“எங்கள் பிரார்த்தனைகளும் எண்ணங்களும் மற்ற குடும்பத்துடன் உள்ளன. நாங்கள் இந்த துயர சம்பவத்தில் உடைந்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply