உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 47 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி இருக்கின்றது.
உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளான நாடு என்ற பெயரை அமெரிக்கா தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு கொரோனாவால் பலி யானவர்களின் எண்ணிக்கையும் 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமான அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷியா, பிருத்தானியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரேசில் உள்ளன.