வழமை போல் தமிழீழ எதிர்ப்பாளர்கள் படை வலு சார்ந்து தலிபான்களையும், புலிகளையும் ஒப்பிட்டு உளற ஆரம்பித்து விட்டார்கள்.
உலகில் எந்த விடுதலைப் போராட்ட அமைப்பையும் புலிகளுடன் ஒப்பிட முடியாது. வரலாற்றில் புலிகள் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதுமில்லை – இனித் தோன்றப் போவதுமில்லை.
ஏனென்றால் அவர்கள் சாதனைகளை இனி யாராலும் இட்டு நிரப்ப முடியாது.
வான்படை மட்டுமல்ல கடற்படையும் வைத்திருந்த முதலும் கடைசியுமான இயக்கம் புலிகள்தான். அவர்களை தலிபான்களுடன் ஒப்பிடுவது கேலிக் கூத்து.
தலிபான்களுக்கென்று தனித்துவமான எந்தப் படைத்துறை உத்தியும் கிடையாது.
அவர்கள் பலமே ஆப்கான் நிலத்தின் புவியியல் அமைப்புத்தான். மலைகளும், குகைகளும், பள்ளத்தாக்குகளும், கணவாய்களும் நிறைந்த அந்த நிலத்தை அமெரிக்கா மட்டுமல்ல வேற்றுக் கிரகத்திலிருந்து ஏலியன்கள் வந்தால் கூட வெல்ல முடியாது.
வரலாற்றில் அவர்கள் அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து நின்று நிலைப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.
ஆனால் தமிழீழம் முற்றிலும் வேறுபட்ட நிலப்பரப்பு. சிறிய வன்னிக்காடுகள் மட்டுமே புலிகளுக்கு எஞ்சியிருந்த ஒரே பாதுகாப்பு.
புலிகளுக்கு இப்படியான ஒரு புவியியல் அமைப்புள்ள நிலம் கூடத் தேவையில்லை. தமிழீழம் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் இரட்டிப்பானதாக இருந்திருந்தாலே போதும், சிங்களத்தை மட்டுமல்ல உலக வல்லரசுகளையே தெறிக்க விட்டிருப்பார்கள்.
புலிகளின் அதியுச்ச சாதனையான கட்டுநாயக்க, அனுராதபுர வான்படைத் தளங்கள் மீதான அழித்தொழிப்பின் போது இந்த நிலப் பரப்பு பற்றாக்குறை காரணமாகவே யுத்த விமானங்களை அழித்தொழிப்பு செய்தார்கள். இல்லையேல் விமானங்களை அழிக்காமல் தமிழீழத்தில் தரையிறக்கியிருப்பார்கள்.
அத்தோடு புலிகளின் படைத்துறை ஆளுமையை விட அவர்களின் அறிவியல் ஆளுமையும் பரிணாமத்திற்கு ஏற்ற வகையில் எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் உத்தியும்தான் புலிகளின் தனித்துவம்.
அறிவியலில் கற்பனைக்கெட்டாத சாதனைகளையும், அறிவையும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் புலிகள்தான்.
இதெல்லாம் தெரியாமல் தலிபான்களுடன் புலிகளை ஒப்பிட்டு பிதற்றுபவர்களை நினைத்து வருந்தத்தான் செய்ய முடியும்.
பரணி கிருஸ்ணரஜனி