உலகை அதிர வைக்கும் தொடர் நிலநடுக்கங்கள்!

You are currently viewing உலகை அதிர வைக்கும் தொடர் நிலநடுக்கங்கள்!

தாய்வான் தீவு நாட்டில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதியன்று ஏற்பட்டுள்ளது.

தாய்வான் நாட்டு தரவுகள் படி சுமார் 7.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதிகளில் சுமார் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேப்போல், அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலும் சுமார் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் லிபர்ட்டி தீவில் உள்ள ‘சுதந்திர சிலை’ யும் அசைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை மக்களும் உணர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை

பாகிஸ்தானில் இஸ்லமாபாத்தில் இன்று மாலை 4.13 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கனவே மியான்மரில் நேற்று 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments