உலகை உலுக்கிய பெரும் விபத்து: OceanGate நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்!

You are currently viewing உலகை உலுக்கிய பெரும் விபத்து: OceanGate நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்!

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்திற்கு பின்னர் வணிக ரீதியான அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாக OceanGate நிறுவனம் முதல் முறையாக அறிவித்துள்ளது. கனேடிய கடற்பகுதியில் மூழ்கியுள்ள டைட்டானிக் பயணிகள் கப்பலை பார்வையிடும் பொருட்டு கடந்த மாதம் புறப்பட்டு சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் பெரும் விபத்தில் சிக்கிய நிலையிலேயே OceanGate நிறுவனம் தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணப்பட்ட ஐவரும் கொல்லப்பட்டனர். வாஷிங்டனில் இருந்து செயல்படும் அமெரிக்க நிறுவனமான OceanGate தங்கள் இணைய பக்கத்திலேயே குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

2009ல் நிறுவப்பட்ட OceanGate நிறுவனமானது, மூழ்கியுள்ள கப்பல்கள் மற்றும் கடலுக்குள் நிகழும் விசித்திரங்களை மிக அருகாமையில் சென்று பார்வையிட வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி அளித்து வந்தனர்.

கடந்த மாதம் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கிய நிலையில், அந்த நிறுவனமானது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ஜூன் 18ம் திகதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மாயமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் வெடித்து விபத்தில் சிக்கியதாக அமெரிக்க கடலோர காவல்ப்படையினர் உறுதி செய்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply