விடுதலைப் புலிகளின் ஆளுமைகளை கண்டு அங்கலாய்க்கும் தென்னிலங்கை !

You are currently viewing விடுதலைப் புலிகளின் ஆளுமைகளை கண்டு அங்கலாய்க்கும் தென்னிலங்கை !

அண்மையில் டைட்டானிக் கப்பலை தேடிச்சென்ற சிறிய நீர்மூழ்க்கிக் கப்பல் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியது. இது குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டது. எனினும் இந்த காலப்பகுதியில் தென்னிலங்கையில் பரவலாக விடுதலைப் புலிகளின் அபார திறமை குறித்து சிங்களர்கள் வியப்படைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் பல்வேறு வகையான இராணுவ கட்டமைப்பை முன்னெடுத்திருந்தனர். அதில் கடற்படை மிகவும் வலுவானதாக செயற்பட்டதுடன், சிங்கள இராணுவத்திற்கு மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் பெரும் சிம்மசொப்பனமாக இருந்தது.

இந்நிலையில் முப்படையினர் பெருமை பேசும் முகப்புத்தகம் ஒன்றில் விடுதலைப் புலிகளின் அபார திறமையினால் நிர்மாணிக்கப்பட்ட நீர்மூழ்க்கிக் கப்பல் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அபார திறமையை கண்டு பிரமிக்கும் தென்னிலங்கை சிங்களவர்கள் | Ltte Submarine Technology Sri Lanka Army

அந்த முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இங்கு பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் வெடித்து சிதறியதாக கூறப்படும் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் அல்ல. இது அழைக்கவே முடியாதென கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலாகும்.

கடற்புலிகளின் சக்தியை ஒருபோதும் உடைக்க முடியாது என சர்வதேச ஊடகங்கள் கூட தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளின் அபார திறமையை கண்டு பிரமிக்கும் தென்னிலங்கை சிங்களவர்கள் | Ltte Submarine Technology Sri Lanka Army

15 வருடங்களுக்கு முன்னர், நம் நாட்டை போன்ற பல நாடுகள் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் ​​விடுதலைப் புலிகள் இலங்கை முழுவதையும் கைப்பற்றக்கூடிய சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவை தொடர்பில் இந்த புகைப்படங்களில் இருப்பவைகள் சிறிதளவு தான்.

ஆயிரக்கணக்கான நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயுதங்களுடன் சென்ற இராணுவத்தின் பத்து கப்பல்களை தொலைதூரக் கடலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து விடுதலைப் புலிகள் அழித்தனர்.

விடுதலைப் புலிகளின் அபார திறமையை கண்டு பிரமிக்கும் தென்னிலங்கை சிங்களவர்கள் | Ltte Submarine Technology Sri Lanka Army

இந்த நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை ஓஷன் கேட் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால் இன்று வரை விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்பட்டிருந்தால் கிளிநொச்சியில் இருந்து கொழும்பை தாக்கும் ஏவுகணைகளை கூட தயாரித்திருப்பார்கள் என அந்த முகப்புத்தக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதிவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதாரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறான திறமைசாலிகளை சரியாக பயன்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றம் கண்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments