உலக அளவில், 40 இலட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

  • Post author:
You are currently viewing உலக அளவில், 40 இலட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஆளாகியிருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 இலட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2 இலட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2 இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிருத்தானியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இத்தாலியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் சீனா, கனடா, பெருவை தொடர்ந்து இந்தியா 14வது இடத்தில் உள்ளது.

பகிர்ந்துகொள்ள