உள்நாட்டு போருக்கு மத்தியில் சிரியாவில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் – 3 அரசு எண்ணெய் ஆலைகள் சேதம்!

  • Post author:
You are currently viewing உள்நாட்டு போருக்கு மத்தியில் சிரியாவில் ஆளில்லா விமானங்கள் தாக்குதல் – 3 அரசு எண்ணெய் ஆலைகள் சேதம்!

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அங்கு எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஒரு பக்கம் சிரியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. மற்றொரு பக்கம் முக்கிய எண்ணெய் ஆலைகள் குர்து இன கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. இதற்கு மத்தியில் அங்கு சிரியா அரசுக்கு சொந்தமான 3 எண்ணெய், எரிவாயு ஆலைகள் மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடந்துள்ளன. இதனால் அந்த ஆலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ளன.

ஹாம்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சிரியா அரசின் எண்ணெய் அமைச்சகம் இது குறித்து குறிப்பிடுகையில், “இந்த ஆளில்லா விமான தாக்குதல்களால் ஆலைகளில் உற்பத்தி பிரிவு பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. சரிபார்க்கும் பணிகள் தொடங்கி உள்ளன” என கூறியது.

தாக்குதல் நடைபெற்ற எண்ணெய், எரிவாயு ஆலைகள் அனைத்தும் ஹாம்ஸ் மற்றும் அதன் புறநகர்களில் உள்ளன, இவை அனைத்தும் 2017-ம் ஆண்டு முதல் சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பகிர்ந்துகொள்ள