மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல – இந்திய பிரதமர் மோடி

  • Post author:
You are currently viewing மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல – இந்திய பிரதமர் மோடி

டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 40 லட்சம் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் குணாதிசயம். சரித்திர நிகழ்வுகளுக்கு ராம்லீலா மைதானம் சாட்சி. 

எதிர்க்கட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்கமாட்டோம். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.
எதிர்க்கட்சிகள் டெல்லியில் 2,000 பங்களாக்களை சட்டவிரோதமாக அவர்களின் கட்சியினருக்கு கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகின்றன. 
நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.  காவலர்கள் எவரின் மதத்தை கேட்டும் உதவுபவர்கள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் சமமானவர்கள். எனது உருவ பொம்மையை எரியுங்கள் ஆனால் ஒருபோதும் பொது சொத்தை சேதப்படுத்த வேண்டாம்.
அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல. 
டெல்லியில் குடியிருப்புகளை அங்கீகரிக்க யாரிடமாவது என்ன மதம் என்று கேட்டோமா? அல்லது பழமையான ஆவணங்களை கேட்டோமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். 

பகிர்ந்துகொள்ள