சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதை கொண்டாடும் விதமாக கண்ணாடி வழியாக முத்தப் போட்டி நடத்திய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதால் சீன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவின் ஊஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 180 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், கட்டமைப்பு பணிகளுக்கு சீனா அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதால் சீன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே ஊரடங்கு தளர்வை கொண்டாடும் விதமாக சுஜோ நகரில் உள்ள யுவேவா என்ற தொழிற்சாலை 10 ஜோடிகளை வைத்து முத்தப் போட்டி நடத்தி மகிழ்ந்தது. கண்ணாடி அடுக்கு வழியாக முத்தமிடும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளது.