ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்!

You are currently viewing ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இரண்டு ஊடகவியாலார்களும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்காக செய்தி சேகரிப்பிற்கு சென்றுள்ள வேளை மரக்கடத்தல் காரர்களால் கடந்த 12 ஆம் திகதி தாக்கப்பட்டுள்ளர்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளது இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று(16.10.2020) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.தனஞ்சயன்,பார்த்தீபன்,ருசிக்கா,துஸ்யந்தி ஆகிய சட்டவாளர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதுடன் எதிர்தரப்பு வாதிகள் சார்பில் மூத்த சட்டவாளர் முன்னிலையாகியுள்ளார்.
தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு ஊடகவியலாளர்களும் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு சென்ற பின்னர் வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையாகியுள்ளார்கள்.
இதன்போது குறித்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை திகதியிடப்பட்டுள்ளது.
ஊடகசுதந்திரிம் பறிக்கப்பட்டுள்ளது ஊடகவியாலளர்கள் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ளமுடியாது ஊடக வியலாளர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை மேலதிகமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் வனவளங்கள் பாதுகாக்கப்படவேண்டும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடர்பில் வாதங்களை முன்வைத்துள்ளதாக ஊடகவியலாளர்கள் சார்பான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்.5 Attachments

பகிர்ந்துகொள்ள