ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பு!

You are currently viewing ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டுள்ளமையினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள்.
இது தொடர்பிலான ஊடக சந்திப்பு ஒன்றினை  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ம.ஈஸ்வரி நடத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மறைமுகாம தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் குற்றவாளிகளுக்கு நேர்iமாய தண்டனை கிடைக்கவேண்டும்.
இலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாக கருத்தினை வெளியிடுவதற்கு அரசிடம் வேண்டுகின்றோம். ஊடகத்துறை அமைச்சரிடமும் இந்த கோரிக்iகியனை முன்வைக்கின்றோம். என்றும் தெரிவித்த அவர்கள்.
தற்போது உள்ள ஊடக அமைச்சர் கேகெலியரம்புக்வெல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் பெயர்மாற்றங்கள் செய்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்கள் இது காணாடல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை திசை திருப்பி இல்லாமல் செய்தவற்கான செயற்பாடாக அமைகின்றது.
2009ற்று முன்னர் அமைச்சர் அவர்களும் அரசில் அங்கம் வகித்தவர் அவருக்கும் தெரியும் இறுதியில் என்ன நடந்தது என்று
நாங்கள் படையினரிடம் கையளித்தவர்கள்,வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் தான் நாங்கள் தேடுகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள