இந்த அரசு, முந்தைய அரசுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இனவெறி அரசுகள் என கூறி, தாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சொல்கின்றது.
அப்படி என்றால் ஏன், இதே அரசின் கீழ், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இப்போது தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள்?
புகைப்படங்களை பகிர்ந்ததற்காக, Kumanan Kana மீது எல்.டி.டி.ஈ. யை “ஆதரிக்கிறாரா?” என்ற புகார்கள் சுமத்தப்பட்டு, அவரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
வடகிழக்கில் இருந்து வரும் மிக நம்பகமான பத்திரிகையாளர்களில் ஒருவராகக் குமணன் தன்னை நிரூபித்துள்ளார். அவரது புகைப்பட ஆவணங்கள், மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளவை.
இவ்வளவு கடுமையான சூழலிலும் அவரும் அவரது குழுவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவது நம் ஒவ்வொருவரதும் கடமையாக இருக்க வேண்டும்.
இந்த சனநாயக விரோதப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றது எமது ஊடகம்.






