ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து ; மோடி எச்சரிக்கை

  • Post author:
You are currently viewing ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து ; மோடி எச்சரிக்கை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என இந்திய பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணியளவில் உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா பரவலை தடுக்க நீடிப்பு அவசியம் ஆகியுள்ளது. நிறுவனங்கள் பணியில் உள்ள ஊழியர்களை நீக்கம் செய்ய வேண்டாம். பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வர வேண்டுமென்றால் முகக் கவசம் அணிவது கட்டாயம். வீட்டில் கூட முகமூடி அணியுங்கள்.

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டும்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என இந்திய பிரதமர் மோடி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மே 3 வரை எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். உங்களை சுற்றியுள்ள ஏழை மக்களை கவனித்து கொள்ளுங்கள். முதியோர்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் என அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள