சிறீலங்காவின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அமைதியான முறையில் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கலகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படலாம் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையினால் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அத்தியாவசியப் பணிகளுக்காகச் செல்வோர் தமது அலுவலக அடையாள அட்டையைக் காண்பித்து பணிக்குச் செல்ல முடியும். அத்துடன்இ விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.
இதேவேளை
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.