ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் எனக்கே உண்டு : அமெரிக்க அதிபர் டிரம்ப்!

  • Post author:
You are currently viewing ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் எனக்கே உண்டு : அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு, அமெரிக்காவிலேயே உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை 25 ஆயிரத்துக்கு மேல் மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சத்துக்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ஊரடங்கை தளர்த்தி, வணிக நிறுவனங்களை திறக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது எனவும், அந்த அதிகாரம் தனக்கே உரியது எனவும் அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நியூயார்க், லூசியானா, மிச்சிகன் போன்ற பகுதிகளிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், மற்ற மாகாணங்களில் பெரும் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிட்டார். இன்னும் சில தினங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் எந்தெந்த மாகாணங்கள் என்பதை தற்போது கூறமாட்டேன் எனவும் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள