ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவரான கந்தையா கலைவாணியிடம், சீருடை தரிக்காத புலனாய்வு பொலிஸார் நேற்றுக் காலை 10, மணிமுதல் நண்பகல் 12, மணி வரை இரண்டு் மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது எனவும் ,அந்த அமைப்பால் இதுவரை செய்த சமூகசேவைகள் தொடர்பாகவும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை கடந்த பெப்ரவரி 3 தொடக்கம் பெப்ரவரி 7 வரை நடைபெற்ற பேரணிகள் தொடர்பாகவும், அதன் பின்னர் மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர ஆலயத்தில் மார்ச் மாதம் இடம்பெற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாகவும் ,விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.