இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு தடவையில், ஒரு விடயத்தை தமிழ் தரப்புக்கள் தமிழ் பேசும் தமிழ் தரப்புக்கள் ஏற்பார்களாக இருந்தால் இனப்பிரச்சினை என்ற விடயம் முற்றுப்பெற்று விடும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துரோகச்செயல்களுக்கு துணைபோகாது இனப்பிரச்சினை என்ற விடயத்தை சமஸ்டி நோக்கி நகர்த்தி செல்கின்றது.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்.நகரில் மக்களை ஒன்று திரட்டி 13 ம் திருத்தத்தினை இனப்பிரச்சினைக்கு தீர்வாக கருத முடியாது என வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தவுள்ளோம்.
இந்த போராட்டம் பல மாவட்டங்களுக்கும் தொடரும். வடகிழக்கு தமிழ் தேசத்தை அணி திரள செய்து இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற வேண்டும். எனவே அனைத்து தமிழ் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நீதிக்காக போராடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.