எதுவித வழக்குகளும் இன்றி சிறையில் உள்ள தனது கணவரை விடுவிக்க கோரிக்கை!

You are currently viewing எதுவித வழக்குகளும் இன்றி சிறையில் உள்ள தனது கணவரை விடுவிக்க கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசு குகநாதன் என்பவர் அரசியல் கைதியாக நியூமகசின் சிறைச்சாலையில் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய கொரோன தொற்று நிலையினை கருத்தில் கொண்டு தனது கணவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனைவி ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தொலைநகலில் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி செயலகம்,சிறைச்சாலைகள் ஆணைக்குழு,மனிதஉரிமைகள் ஆணைக்குழு,சட்டமாஅதிபர் திணைக்களம், ஆகியோருக்கு தொலைநகல்கள் ஊடாக இந்த கடிதத்தினை அனுப்விவைத்துள்ளார்.
உடையார் கட்டுவடக் உடையார் கட்டில் வசிக்கும் நடேசு குகநாதன் கடந்த 2009 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் 24 ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு 21 மாதங்கள் பூசா சிறையில் தடுத்துவைத் விசாரணை முடிந்து 2011.05 ஆம் மாதம் தொடக்கம் நீதிமன்ற சிறையில் 10 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது மனித உரிமை வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது அழுத்கடை நீதிமன்றில் முற்படுத்தி புனர்வாழ்வு என தீர்பு வழங்கப்பட்டு கடந்த 2012.03.24 அன்று தொடக்கம் வவுனியா மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு 2013.03.24 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்
விடுதலையின் பின்னர் வீட்டில் வசித்து வந்த வேளை 2013.07.11 அன்று மீண்டும் பொலீசாரால் கைதுசெய்து விசாரணைக்காக பூசாமுகாம் மற்றும் ஆறாம் மாடி ஆகிய சிறைகளில் 18 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை முடிந்து 2015.01.02 அன்று அழுத்கடை 08 இலக்க கோட்சில் முற்படுத்தி இன்றுவரை எந்தவித வழக்குகளும் பதியப்படாத நிலையில் நியூமகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காலத்தில் கூட நீதிமன்றத்தில் முற்படுத்தாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே நியூமகசின் சிறைச்சாலையில் அதிகூடிய வைரஸ் தொற்று காணப்படுவதாகவம் இதனை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் அவர்களுக்கு கூட பிணை வழங்கப்பட்டுள்ளது. 
ஆனால் கடந்த 88 மாதங்கள் எந்த விதமான வழக்குகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள எனது கணவரானா நடேசு குகநாதன் என்பருக்கு போதிய சத்தான உணவு கிடைக்க வாய்ப்பில்லாத காரணத்தினால் எனது இரண்டு பிள்ளைகளும் தந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் இன்னிலையில் எனது கணவரை பிணையிலாவது விடுதலை செய்யவேண்டும் என கோரி நிக்கின்றேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

பகிர்ந்துகொள்ள